Tamil Solidarity is actively taking part in the general election on the 8th June and will be distributing leaflets in Tamil and talking to ordinarily people.
Last weekend, we have been talking to Tamil-speaking people in Eastham. We have filmed them talking about who they will vote in the election. Please see the video here:
For Tamil-speaking people, the choices cannot be clearer for this election. Jeremy Corbyn policy of increasing £10 per hour minimum wage, to build more council homes, to abolish university fees, to end zero hour contract, etc. are the policies that’s going to improve our lives.
This Sunday we will be meeting outside Wembley Central Station at 12 noon. Please get in contact with us if you can join in and help.
This is the leaflet that we will be giving out
Text here:
உங்கள் வாக்கு யாருக்கு? சிந்தித்து வாக்களிப்போம்.
ஜூன் மாதம் நடக்க இருக்கும் தேர்தலில் இங்கு வாழும் தமிழ் பேசும் மக்கள் எத்தகய நிலைப்பாடை எடுக்க வேண்டும்.
முக்கிய இரு கட்சிகளான தொழிலாளர் கட்சி, மரபுக் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் என்ன கொள்கைகளை முன் வைக்கிறார்கள் என்பதைப் பார்த்து மக்கள் முடிவெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ் பேசும் மக்கள் அக்கறை எடுக்க வேண்டிய சில கொள்கைப் புள்ளிகள்.
ஜெரேமி கோர்பின்
அனைவருக்குமான குறைந்தளவு ஊதியத்தை மணிக்கு 10 பவுன்சுகளாக உயர்த்துதல்.
மருத்துவ சேவையைத் தனியார் கைகளில் இருந்து விடுவித்து அனைத்து மக்களும் இலவச சேவையைச் சரியாக பெற்றுக் கொள்ளத் தேவையான முதலீட்டை ஒதுக்குதல்.
ஒரு மில்லியன் வீடுகளைக் கட்டுதல்.
பிரித்தானியாவில் இருக்கும் அனைத்து ஐரோப்பியர்களுக்கும் வதிவிட உரிமை வழங்குதல். அகதிகளுக்கான உரிமைகளை அதிகரித்தல்.
மனித உரிமைச் சட்டத்தைப் பாதுகாத்தல்.
மக்களுக்கான சேவைகள் வெட்டப்படுவதை நிறுத்துதல்.
மக்களின் வரியை அதிகரிக்காமல் இருத்தல்.
தெரசா மே
வறிய இடங்களில் குறைந்தளவு ஊதியத்தை தற்போது இருக்கும் அளவிலும் இருந்து குறைப்பது அவரது திட்டம் என்பதை இன்டிபென்டென்ட் பத்திரிகை வெளியிட்டிருந்தது.
மருத்துவச் சேவைகளைத் தனியார் மயப்படுத்தி –பல சேவைகளுக்கு மக்களிடம் கட்டணத்தை அறவிடல்.
இரண்டு லட்சம் வீடுகளை கட்டி விற்றல் – இது தனியார் கைவசம் விடப்படும்.
வெளிநாட்டவர்கள் மற்றும் அகதிகளுக்கான உரிமைகளை கடுமையாக்குதல். அகதி உரிமைகள் வழங்குதலை கடுமையாக குறைத்தல்.
மனித உரிமைச் சட்டத்தை இல்லாமல் செய்தல்.
மக்களுக்கான சேவைகளைக் குறைத்தல் – தனியார் மயப்படுத்த உந்துதல். இது பற்றி அவர் முழுமையாக வெளிப்படையாகப் பேச மறுத்து வருகிறார்.
மக்கள் வரி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது எனக் கூறி உள்ளார். இதே சமயம் பெரும் கோர்பறேட்டுகளுக்கு வரி குறைப்பைச் செய்வதாகவும் சொல்லி உள்ளார். இவரது பொருளாதாரக் கொள்கை மக்களையும் சிறு வியாபாரங்களையும் பெரிதளவு பாதிக்கும் என நாம் நம்புகிறோம்.
மேற்சொன்ன கொள்கைகளை பார்த்த அடிப்படையில் தான் நாம் தமிழ் பேசும் மக்கள் ஜெரேமி கோர்பினுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோருகிறோம்.
நாம் யார்:
நாம் லேபர், கன்சவேட்டிவ், லிபரல் என எந்தக் கட்சியுடனும் சேர்ந்து இயங்கும் அமைப்பு சார்ந்தவர்கள் அல்ல. பாதிக்கப்படும் தமிழ் பேசும் மக்களின் குரலை வலுப்படுத்த இங்கும் ஈழத்திலும் கடுமையான போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருபவர்கள் நாங்கள். தமிழ் பேசும் மக்களின் தேசிய உரிமை உட்பட பல கோரிக்கைகளுடன் நீண்ட காலம் இணைந்து நின்ற ஜெரமி கோர்பின் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஆன பொழுது கூட நாம் நிபந்தனையற்ற ஆதரவை அவருக்கு வழங்கவில்லை. கோர்பின் முன் வைத்த கொள்கைகள் என்ன? – அதனால் இங்கிலாந்து வாழ் ஒடுக்கப்படும் மக்கள் மற்றும் தமிழ் மக்கள் உட்பட சிறுபான்மை ஆசிய ஆபிரிக்க மக்கள் ஆகியோருக்கு என்ன நன்மைகள்? – என்ற கேள்விகளின் அடிப்படையிலேயே ஆதரவு தர முன்வந்துள்ளோம்.
பல்கலைக்கழக மாணவர்கள், இங்கிலாந்தில் பிறந்து வளரும் அடுத்த தலை முறைத் தமிழ் இளையோர், ஆகியோர் பலருடன் தமிழ் சொலிடாரிட்டி என்ற போராட்ட அமைப்பும் இணைந்து திரண்ட தளமே இந்த கோர்பினுக்கான தமிழர் தளம். இது ஒரு அமைப்போ அரசியல் கட்சியோ அல்ல. மாறாக தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் சரியான கொள்கை – நியாயமான அரசியல் பக்கம் திரட்சி உண்டு என்பதைப் பகிரங்கப்படுத்தி –சிறந்த கோரிக்கைகளை வென்றெடுக்கும் முறையில் நகர்ந்து – எமது மக்களின் நலன்களை முதன்மைப் படுத்துவது எமது நோக்கம்.
உங்கள் நிலைப்பாடு என்ன ? நீங்களும் கோர்பின் கொள்கைகளுக்கு ஆதரவாளரா ?
தயவு செய்து எம்முடன் தொடர்பு கொண்டு அறியத் தாருங்கள்.
பின் வரும் இணையத் தளத்திற்கு சென்று உங்கள் ஆதரவைப் பதிவு செய்யுங்கள்.
இந்த ஈமெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
மேற்சொன்ன கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டும் செயற்பாடுகளில் இனைய விரும்புவோர் தயவு செய்து இந்தத் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.